அமெரிக்காவுக்குச் சென்ற கவிஞர் கண்ணதாசன் தமிழ்ப் பிள்ளைகள் தமிழில் பேசவில்லை என்று ஆதங்கத்துடன் ஒரு பாட லை எழுதினார்:
“மனிதனில் ஒன்று பட்டு சேர்ந்திருப்பீர்;
இங்கு மழலைகள் தமிழ் பேசச் செய்து வைப்பீர்;
தமக்கெனக் கொண்டு வந்ததேதுமில்லை;
பெற்ற தமிழையும் விட்டு விட்டால் வாழ்க் கையில்லை”
என்றார் கவிஞர் கண்ணதான். இதுதான் அவர் எழுதிய கடைசிப் பாடல்.
தொடர்புடைய சுட்டி : தமிழ் சினிமாவும் பாடல்களும்
2 responses to “கடைசிப் பாடல்”
தேன் - ஈ
September 5th, 2009 at 17:15
கவிஞர் எண்பதுகளில் அமெரிக்கவாழ் தமிழர்களுக்கு எழுதியது தற்பொழுது நகரங்களில் வாழ்ந்து வரும் எல்லா தமிழர்கழுக்கும் பொருந்தும். சென்னை நகரில் வணிக நிறுவனங்களுடைய பெயர் பலகைகளிலும், விளம்பர பலகைகளிலும் தமிழின் பயன்பாடு குறைந்து வருவதும் கவலைக்குறியது.
கவிஞர் தாரை கிட்டு
December 13th, 2014 at 16:46
”மனிதரில் ஒன்றாகச் சேர்ந்திருப்பீர்” என்ற வரிகள் கண்ணதாசன் எழுதிய கடைசிக் கவிதை. “கண்ணே கலை மானே” தான் அவர் எழுதிய கடைசிப் பாடல். பாடலுக்கும் கவிதைக்கும் வித்தியாசம் உள்ளது.