Archive for February, 2012

கண்ணதாசனிடம் ஆசி பெறும் ரஜினிகாந்த்

கோவையில் பாவலன்

எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும்

எம்.ஜி.ஆர், முதலமைச்சராக இருக்கையில் கவிஞரை அரசவைப் புலவராக நியமித்த பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம் இது,

காமராஜருடன் கண்ணதாசன்

கண்ணாதாசனுடன் ஜெயகாந்தன் (வருடம் 1977)

மோதிர ரகசியம்!

சென்னை மாமன்றத் தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்ற சமயம் அண்ணா தலமையில் பாராட்டுக் கூட்டம் நடைபெறுகின்றது. வெற்றிக்காகப் பாடுபட்டவர்களின் பெயர்கள் அழைக்கப்படும் போது அந்தத் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் செய்த தனக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படும் என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது கண்ணதாசன் மேடைக்குக் கூட அழைக்கபடுவதில்லை. மேலும் அண்ணா, கருணாநிதிக்கு மோதிரம் அணிவித்துக் கவுரவம் வேறு செய்கின்றார். பெரிதும் ஏமாற்றமடைந்த கண்ணதாசன், நேராக அண்ணாவிடம் சென்று, “என்ன அண்ணா! இப்படி சதி செய்து விட்டீர்கள்?” என்று கேட்க, அவரோ, “அட, நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு; அடுத்த கூட்டத்தில் போட்டு விடுகின்றேன்” என்று சொல்ல, ‘இதென்ன தில்லாலங்கடி’ என்று திகைத்து நிற்கின்றார்.

நூல்: வனவாசம்
ஆசிரியர்: கண்ணதாசன்

பொன்மொழிகள்