30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கேட்டதற்கு கண்ணதாசனில் கவிதையை பாருங்கள்
அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல.பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய கதையுரைத்து
வகுத்துணரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
3 responses to “கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்”
Jana
May 28th, 2012 at 13:16
30 வருடகாலத்தின் முன்னே கருணாநிதி என்னும் அரசியல் வியாதியை அடையாளம் கண்டுவிட்டார் கண்ணதாசன். ஆனால் எமக்கோ இத்தனை காலம் வேண்டியிருந்தது இந்த மனிதனின் வேசம் புரிந்த கொள்ள. ஆவேசமான கவிதை.
அறிவன்
May 29th, 2012 at 03:40
அருமையான கவிதை..
பாராட்டுக்கள்.
Sundar Raman s
August 10th, 2018 at 05:58
கவிஞர் மறைந்தது 1981. அப்படி என்றால் இந்த 30 வருஷம் கணக்கு தவறாக இருக்கலாம்.