ஒருமுறை கவிஞர் கண்ணதாசனிடம் அவரது துணைவியார் பார்வதி அம்மாள் சென்று “நான் மோதிரம் செய்து அணிந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். மோதிரத்தில் அச்சடிக்க உங்கள் கைப்பட ‘பார்வதி கண்ணதாசன்’ என்று எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.
அவரும் தன் மனைவியின் விருப்பப்படியே தன் கைப்பட எழுதிக் கொடுக்கிறார். அவர் மனைவியும் அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து அவரை மீண்டும் அழைத்து ” நான் எழுதியதை சரியாக வாசித்தாயா..?” என்று புதிர் போட , அந்த வாக்கியத்தை மீண்டும் பார்வதி அம்மாள் படித்துப் பார்க்கிறார்.
அதில் “பார் அவதி கண்ணதாசன்” என்று எழுதி இருக்கிறது.
கல்யாணமான அத்தனை புருஷன்மார்களும் நம்மை போலவேதான் அவதிபடுகிறார்கள் போலிருக்கிறது.
என்ன இருந்தாலும் கவிஞர் கண்ணதாசன் அனுபவக் கவிஞர் அல்லவா..?
—அப்துக் கையூம்
3 responses to “பார்அவதி கண்ணதாசன்”
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
November 2nd, 2016 at 09:03
இரசித்தேன் நண்பரே குறும்பை…
natchander
November 2nd, 2016 at 09:27
bro actually parvathy amma had only struggled to live with this kannadasan…
apart from parvathy amma he had married THREE women…
now you tell me who had struggled to live with
whom…
அப்துல் கையூம்
November 2nd, 2016 at 14:12
ஒரு கவிஞனின் சிலேடை ரசனையைத்தான் நாம் இங்கு படித்து ரசிக்கிறோமே அன்றி அவரது இல்லற இரகசியங்களை துருவி ஆராய அல்ல. கண்ணதாசனுக்கு மொத்தம் 3 மனைவிகள் , 14 பிள்ளைகள் சகோ.