Posts from the ‘அரிய புகைப்படங்கள்’ Category

சிவாஜி பற்றி சில வரிகள்:

எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !

–கவியரசு கண்ணதாசன்

தகவல் பெறப்பட்ட வலைத்தளம்

கவியரசர் கண்ணதாசன் அவர் மனைவி பார்வதி ,மகன்கள் கமல் மற்றும் காந்தியுடன்

உயிர் பிரிவதற்கு முன்னால்

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த கண்ணதாசனைப் பார்ப்பதற்கு சென்னை கமலா தியேட்டர் உரிமையாளரான வி.என்.சிதம்பரம் போய் – படுக்கையிலிருந்த கண்ணதாசனின் நெற்றியில் மீனாட்சி கோயில் குங்குமத்தை இடுகிறார்.

கவிஞர் உயிர் துறப்பதற்கு முன்னால் எடுக்கப்பட்ட அபூர்வமான புகைப்படம் இது.

கவிஞர் கண்ணதாசன் – அரிய புகைப்படங்கள்

கண்ணதாசனிடம் ஆசி பெறும் ரஜினிகாந்த்

கோவையில் பாவலன்

எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும்

எம்.ஜி.ஆர், முதலமைச்சராக இருக்கையில் கவிஞரை அரசவைப் புலவராக நியமித்த பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம் இது,

காமராஜருடன் கண்ணதாசன்

கண்ணாதாசனுடன் ஜெயகாந்தன் (வருடம் 1977)